கானாவில் பல்லடுக்கு வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 9, 2012

கானாவின் தலைநகர் ஆக்ராவில் பல்லடுக்கு வணிக வளாகம் ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து இடிபாடுகளில் இருந்து இது வரையில் 78 பேர் வெளியே இழுத்து எடுக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் இறந்த நிலையிலும், 69 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.


மேலும் பலர் இடிபாடுகளிடையே அகப்பட்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவ்வாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததற்கு கட்டுமானத்தில் இடம்பெற்ற பெரும் தவறுகளே காரணம் எனக் கூறப்படுகிறது.


மூலம்[தொகு]