கசக்ஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் வரை உயிரிழப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 16 மே 2014: நவீன ரக செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற உருசிய புரோட்டோன்-எம் ஏவூர்தி வானில் வெடித்தது
- 2 சூலை 2013: உருசியாவின் 'புரோட்டோன்-எம்' ஆளில்லா ஏவூர்தி கசக்ஸ்தானில் வீழ்ந்தது
- 29 சனவரி 2013: கசக்ஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் வரை உயிரிழப்பு
செவ்வாய், சனவரி 29, 2013
கசக்ஸ்தானின் வணிகத் தலைநகரான அல்மாத்தியில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
கசக்ஸ்தானின் வடக்கு நகரான கொக்செத்தாவுவில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் நேரம் 1300 மணிக்கு விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என ஸ்காட் ஏர்லைன்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை, ஆனாலும் வானில் பெரும் மூடுபனி காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் தீயோ அல்லது வெடிப்புகளோ இடம்பெறவில்லை என்றும், ஆனாலும் விமானம் தரையில் மோதியுள்ளதென்றும் அல்மாத்தி நகர அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்டக் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உயர் இராணுவ அதிகாரிகள் பயணம் செய்த இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Passenger plane crashes near Kazakh city of Almaty, பிபிசி, சனவரி 29, 2013
- Plane crash in Kazakhstan ‘kills 20’ near Almaty, யூரோநொயூஸ், சனவரி 29, 2013