நெதர்லாந்தின் மன்னராக வில்லெம் அலெக்சாண்டர் பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 30, 2013

33 ஆண்டுகள் நெதர்லாந்தின் இராணியாக இருந்த பியடிரிக்சு முடிதுறந்தை அடுத்து அவர் மகன் வில்லெம் அலெக்சாண்டர் மன்னராக பதவியேற்றார்.


வில்லெம் அலெக்சாண்டர்

1890ம் ஆண்டில் மூன்றாம் வில்லெம் மறைந்த பிறகு நெதர்லாந்தின் மன்னராக பதவியேற்பவர் இவரே. பதவியேற்பு விழா ஆம்ஸ்டர்டாம் நகரில் சிறப்புடன் நிகழ்ந்தது. இவ்விழாவுக்கு பெருந்திரளான மக்கள் ஆரஞ்சு நிற ஆடை உடுத்தி கூடியிருந்தனர். முடிதுறந்ததை அடுத்து இராணி பியடிரிக்சு இனி இளவரசி என அழைக்கப்படுவார்.


73 வயதுடைய இராணி பியடிரிக் தன் மகன் அரியணைக்கு வருவதற்காக முடி துறக்க உள்ளதாக சனவரி மாதம் அறிவித்தார். புதிய தலைமுறை அரியணை ஏறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று கூறியிருந்தார். 47 வயதான மன்னர் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி மாக்சிம் (41 வயது) அர்ஜெண்டீனா நாட்டில் பிறந்தவர் இவரும் தான் அரியணைக்கு உரிமை கோரப்போவதில்லை என்று எழுதி கொடுத்துள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


இந்நிகழ்ச்சிக்கு உலகின் பல்வேறு அரச குலத்தினரும் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.


நெதர்லாந்தில் மன்னருக்கு சில அதிகாரங்களே உள்ளது. இது அலங்கார பதவியாகும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நெதர்லாந்தை ஆளும் ஆரஞ்சு-நாசாவ் வம்சத்தின் 7 வது மன்னராக இவர் பதவியேற்றுள்ளார்.


மூலம்[தொகு]