உள்ளடக்கத்துக்குச் செல்

சிரிய அரசு எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 7, 2013

சிரிய அரசு எதிர்ப்பு படையினர் வேதியியல் ஆயுதமான நரம்பை பாதிக்கும் சிரினை பயன்படுத்தி இருக்கலாம் என ஐயப்படுவதாக ஐநா மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். சிரிய உள் நாட்டுப்போரில் பாதிக்கட்டவர்களும் மருத்துவர்களும் கொடுத்த தகவல் படி எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தி இருக்கலாம் என தான் ஐயமுறுவதாக இந்த அமைப்பின் உறுப்பினர் கார்லா டி பான்டே தெரிவித்தார்.


எனினும் உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். சிரிய அரசுப்படைகள் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் சிக்கவில்லை என்று இவ்வமைப்பினர் தெரிவித்தனர். வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவதை சிரிய எதிர்ப்புப் படைகள் மறுத்துள்ளன.


சரின் என்பது நிறமற்ற சுவையற்ற காற்று இது நரம்பு மண்டலத்தை பாதித்து மனிதனை கொல்லும் திறன் உடையது. இதன் பயன்பாட்டை அனைத்துலக சட்டம் தடைசெய்துள்ளது. கார்லா டி பான்டே சுவிச்சர்லாந்து நாட்டின் முன்னால் தலைமை அரசு வழக்கறிஞர் ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தில் யுகோசுலோவியா நாட்டுக்கு எதிரான வழக்குரைஞராக உள்ளார்.


சிரிய அரசும், எதிர்ப்புப் படைகளும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஒன்றை மற்றொன்று குற்றம் சாட்டியுள்ளன.


அமெரிக்க அரசு சிரிய எதிர்ப்புப் படைகள் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கமோ திறனோ உடையவர்கள் என்று தகவல் தங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளது. ருசிய வெளியுற அமைச்சர் சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு உலக மக்களை தயார்படுத்தும் செயல் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.


சிரிய அரசு வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்துவதாக தான் கருதுவதாக கூறி ருசியாவின் சிரிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மாஸ்கோவுக்கு இந்த வாரம் மேற்கொள்ளவிருந்த பயணம் டி பான்டே அவர்களின் கருத்தால் சிக்கலாகியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]