திருமங்கலம் பகுதியில் கோமாரி நோய் பரவி வருகிறது
Appearance
மதுரையில் இருந்து ஏனைய செய்திகள்
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
- 23 நவம்பர் 2013: மதுரையில் மின்தடை நேரம் அதிகரிப்பு, கொசுக்கடியால் மக்கள் தவிப்பு
- 22 நவம்பர் 2013: மதுரை வானூர்தி நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்
- 22 நவம்பர் 2013: பழம்பெரும் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்
- 22 நவம்பர் 2013: அமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு
தமிழ்நாட்டில் மதுரையின் அமைவிடம்
வெள்ளி, நவம்பர் 22, 2013
திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கரடிக்கல், தங்களாச்சேரி, புங்கங்குளம், உரப்பனூர் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறவை மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில வாரங்களாக இப்பகுதி மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. இவ்வகை நோய் பாதிப்புக்குள்ளான மாடுகள் தீவனம் உண்ணாமலும், நீர் அருந்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். நடக்க முடியாமலும் உள்ளன. தினசரி 10 முதல் 15 லிட்டர் பால் தந்த பசு மாடுகள், நோய் பாதிப்பால் 2 லிட்டர் கூட பால் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாடுகள் வளர்ப்போர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சில கிராமங்களில் காளை மாடுகளும் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
மூலம்
[தொகு]- திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது., தினகரன், நவ 22, 2013