உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்கொழும்பில் ஆமை இறைச்சி விற்பனை நிலையம் மூடப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 13, 2014

இலங்கை, வத்தளை காவல்துறையினர் இன்று ஆமைகளை இறைச்சிக்காக கொலைசெய்து விற்கப்படும் இடம் ஒன்றை பரிசோதனையில் முடக்கினர்.


பிடிபான, நீர்கொழும்பு எனும் இடத்திலேயே இந்த சட்டவிரோத இறைச்சி விற்பனை நிலையம் இயங்கிவந்துள்ளது. பொலீசார் இரண்டு ஆமைகள் இறைச்சிக்காக கொலைசெய்யப்பட்டிருப்பதை கண்டுகொண்டதுடன் மேலும் எதிர்கால இறைச்சித் தேவைக்காக வைத்திருந்த இரண்டு உயிர் ஆமைகளையும் கைப்பற்றினர்.


காவல்துறையினரின் கருத்துப்படி இதுவரை சுமார் 100 ஆமைகள் இங்கே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை இந்த இறைச்சி விற்பனை நிலையத்திற்கு மீனவர்கள் வழங்கியுள்ளதாகவும், இங்கிருந்து ஒரு கிலோ இறைச்சி சுமார் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமைகள் ஒரு அழிந்துவரும் இனம் என்பதோடு இலங்கையின் நீர்கொழும்புப் பகுதியின் கரையோரத்தில் வாழ்து வரும் மக்கள் ஆமை இறைச்சி ஒரு சத்தான உணவு என்றும் எண்ணுகின்றனர். இலங்கை சட்டத்தின்படி ஆமைகளைக் கொலைசெய்வது சட்டப்படி குற்றமாகும். அதை மீறி கொலைசெய்பவரிற்கு தண்டம் மற்றும் சிறைத் தண்டனை ஆகியவை வழங்கப்படலாம்.


இந்த இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்தியவர் என்று கருதப்படும் நபர் நீர்கொழும்பு நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.


மூலம்

[தொகு]