உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பானில் கடும் பனிப்பொழிவு, 11 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 9, 2014

சப்பானில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.


சப்பான் பனிப்பொழிவு

ஜப்பானில் வடகிழக்கு நகரான சென்டாயின் சாலைகளில் 35 செ.மீ அளவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவு 27 செ.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக டோக்கியோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மோசமான வானிலை காரணமாக சாலை விபத்துகளில், 11 பேர் உயிரிழந்தனர். 25,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது வீட்டு கூரைகளில் குவிந்த பனி குவியலை, அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள், கீழே விழுந்து காயமடைந்து உள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.


ஜப்பானில் சுமார் 740 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 5,000 பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். நகரின் முக்கிய போக்குவரத்தான ‘புல்லட் தொடருந்து’ செல்லும் பாதைகளிலும் பனி மூடி இருந்ததால் பல தொடருந்துகள் தமது வேகத்தை குறைத்து செல்கின்றன


சப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு எழுத இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்க நேரிட்டது


மூலம்

[தொகு]