தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 21, 2014


தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது.


கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்த முழுமையான தகவல்களை பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று அறிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டினைக் காட்டும் விளக்க அட்டவணை
கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் மத்திய சென்னை, வட சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் (தனி)
பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி), கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி
பாட்டாளி மக்கள் கட்சி ஆரணி, அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் (தனி)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி)
இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொள்ளாச்சி
என். ஆர். காங்கிரஸ் கட்சி பாண்டிச்சேரி



மூலம்[தொகு]