தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது
Appearance
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
ஞாயிறு, நவம்பர் 1, 2015
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியதையடுத்து, மாநிலம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த முறை 6 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, அக்டோபர் 28 அன்று இந்தப் பருவம் தொடங்கியது.
இன்று காலை 8.30 மணியோடு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில், அதிகபட்சமாக அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்), காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்), கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்), திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) ஆகிய இடங்களில் 7 செ. மீ. அளவிற்கு மழையளவு பதிவாகியுள்ளது.
நவம்பர் 2 அன்று தென்னிந்தியப் பகுதிகளில் பலத்த மழை இருக்குமென சென்னை வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- City can expect monsoon magic from today, தி இந்து, அக்டோபர் 28, 2015
- Day 4: monsoon exposes chinks in civic infrastructure, தி இந்து, நவம்பர் 1, 2015
- ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை, தினமணி, நவம்பர் 1, 2015
- IMD forecasts more rains in South, தி இந்து, நவம்பர் 1, 2015
- வட்டார வானிலை நடுவம், சென்னை