உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 11, 2016

மெக்சிக்கோவின் வடகிழக்கு மாண்டிரேயிலிலுள்ள சிறைச்சாலையில் வியாழக்கிழமை அன்று போதை கடத்தல் கும்பல்கள் இடையேயான தகராறில் தீ வைக்கப்பட்டதில் 52 பேர் இறந்தனர். 12 பேர் காயமுற்றனர்.


நடு இரவில் சிறையின் டாபோ சிகோ பகுதியின் இரு பகுதிகளில் சீட்டா போதை கும்பலுக்கும் மற்றொரு போதை கும்பலுக்கும் இடையே சண்டை மூண்டது என நிவோ இயோன் மாநில ஆளுநர் தெரிவித்தார்.


டாபோ சிகோ சிறை மிக பழைமையானதாகும்.மாண்டிரே மெக்சிக்கோவின் மூன்றாவது பெருநகரமாகும்.


2014 மனித உரிமை அறிக்கை டாபோ சிகோ சிறைச்சாலை கலவரங்களை தடுக்க அக்கறை காட்டுவதில்லை என குறிப்பிட்டிருந்தது. இச்சிறையிலேயே சீட்டா போதை குழு உறுப்பினர்களே அதிகம் அடைக்கப்பட்டுள்ளனர்.



மூலம்

[தொகு]