உள்ளடக்கத்துக்குச் செல்

உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 14, 2016

மன்னர் பூமி பால் அதுல்யாதெச்

உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை மரணமடைந்தார்.


1946இல் பதவியேற்று 70 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இறந்ததிற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனினும் சென்ற ஆண்டு பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தார், உள்ளூர் நேரம் மாலை நான்கு மணி அளவில் மரணித்தார்.


பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் மன்னராக பொறுப்பேற்காமல் அடுத்த மன்னரை நியமிக்கும் சடங்கை தள்ளி போடச்சொல்லியுள்ளார். அதிகாரபூர்வமாக இவரது இறப்புக்கு அஞ்சலி ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கப்படும்.


1932இல் அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. இதை ஏற்க முடியாத அப்போதைய அரசர் பிரஜாதாய்போக் 1935இல் நாட்டை விட்டு வெளியேறினார். 1927இல் பிறந்த பூமிபால் 1946இல் மன்னராக பதவியேற்றார்.


இவர் மன்னராக இருந்த பொழுது தாய்லாந்து 32 பிரதமர்களை பார்த்துள்ளது.

மூலம்

[தொகு]