கொங்கோவில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 140 பேர் உயிரிழப்பு
வெள்ளி, சூலை 30, 2010
- 9 ஏப்பிரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது
- 6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு
- 29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு
- 24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்
- 15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்
கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் கொங்கோ ஆற்றின் ஒரு கிளையான கசாய் ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 140 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டுண்டு என்ற மேற்கு மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து நடந்ததுள்ளது. 80 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பலரைக் காணவில்லை எனவும் தகவல்துறை அமைச்சர் லாம்பேர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு சேற்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக இங்கு இடம்பெற்று வரும் மோதல்களினால் தரை வழிப் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பெரும்பாலானோர் படகுகளிலேயே பயணிக்கின்றனர்.
இதே மாகாணத்தில் கடந்த ஆண்டு படகு ஒன்று கவிழந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
[தொகு]- "DR Congo boat sinking 'kills 140'". பிபிசி, ஜூலை 29, 2010
- "DR Congo boat sinking 'leaves 140 dead'". டெய்லி டெலிகிராப், ஜூலை 29, 2010