அடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்தெம்பர் 6, 2011

சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் 750,000 இற்கும் அதிகமானோர் அங்கு அடுத்த சில மாதங்களுக்குள் இறக்கக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.


கடந்த 60 ஆண்டுகளில் அந்நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப் பெரும் வறட்சியினால் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அல்-சபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்குப் பகுதியில் பே என்ற பகுதி புதிதாக பட்டினிப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.


"மொத்தத்தில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் 750,000 பேர் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்றனர்," என ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை இறந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என அவர் கூறினார்.


சோமாலியாவுக்கு அயல் நாடுகளான ஜிபூட்டி, எரித்தீரியா, எதியோப்பியா, கென்யா, மற்று உகாண்டா ஆகியவையும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.


மேற்குலக உதவி நிறுவனங்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக வறட்சியை மிகைப்படுத்திக் காட்டுவதாக அல்-சபாப் இயக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]