உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக்காவில் பிரெஞ்சு உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 30, 2010

அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

அண்டார்க்டிக்காவில் நான்கு பேருடன் சென்ற பிரெஞ்சு உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது. மூன்று பேரின் உடல்களைத் ஆத்திரேலிய மீட்பு விமானம் ஒன்று கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.


நான்காவது நபரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.


பிரெஞ்சு துருவ ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள், தொழிநுட்பவியலாளர் ஒருவர், மற்றும் விமானியுடன் புறப்பட்ட உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக காணாமல் போய் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்ற ஆய்வு மையத்தில் இருந்து ஏறத்தாழ 100 கிமீ தூரத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது.


AS350 ஸ்குவிரல் உலங்குவானூர்தி சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு 370 கிமீ தூரத்தில் இருந்த டுமோண்ட் டி ஊர்வில் என்ற தமது தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்தில் உலங்கு வானூர்தியின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக ஆத்திரேலிய தேடுதல் நிபுணர்கள் தெரிவித்தனர். எவரும் உயிர் தப்பிய்யிருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறினர்.


மூலம்[தொகு]