அண்டார்க்டிக்காவில் பெரும் பனிப்பாறை உருவாகிறது

விக்கிசெய்தி இலிருந்து
அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், நவம்பர் 7, 2011

அண்டார்க்டிக்காவின் மேற்குப் பகுதியில் மாபெரும் பனிப்பாறை ஒன்று உருவாகி வருவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பைன் தீவுப் பனியாறில் பெரும் பிளவு

பைன் தீவுப் பனியாற்றின் முன் உள்ள மிதக்கும் பனிக்கட்டியில் பிளவு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்திற்குச் செல்கிறது. இதன் ஆழம் 60 மீ ஆகும். இது நாள் தோறும் வளர்ந்து வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தப் பனிப்பாறை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2012 இன் தொடக்கத்திலோ முழுமையாக வளர்ச்சி அடையும். இந்த தகவலை அமெரிக்காவின் நாசா வானியல் ஆய்வுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பனிப்பாறை 880 சதுர கிமீ பரப்பளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முழுமையாக வளர்ச்சி அடையும் பட்சத்தில் அது செருமனியின் தலைநகரம் பெர்லின் அளவு இருக்கும்.


அண்டார்க்டிக் கண்டத்தில் உள்ள பனியாறுகளில் பைன் தீவுப் பனியாறு மிகப் பெரியதும், விரைவாக ஓடும் பனியாறும் ஆகும். உலகின் பெருங்கடல்களுக்குள் பாயும் பனிக்கட்டிகளுள் பத்தின் ஒரு வீதம் பைன் தீவுப் பனியாறில் இருந்தே பாய்கிறது.


மூலம்[தொகு]