உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 2, 2016

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு இணங்க, வாடிக்கையாளரின் அனுமதி தவிர்த்து வேறு யாருக்கும் கடவுச்சோல்லை தர முடியாது என்று கூறிவிட்டது.


அமெரிக்காவில் நடந்த தொடர் கொலை வழக்கில் குற்றவாளிகளான தம்பதிகள் இருவரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுவிட்டனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆப்பிள் போனில் வேறு தகவல்கள் இருக்கிறதா என்று ஆராய ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் போனின் கடவுச்சொல்லை ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டுப்பெற முயன்றது. இதன் காரணமாகப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


நடந்து முடிந்த இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளரின் அனுமதி பெற்றுத்தான் கடவுச்சொல்லை பயன்படுத்தலாம். அதனைத் தவிர்த்து வேறு யாருக்கும் கடவுச்சொல்லை கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. ஆப்பிள் போனைப் பொருத்தவரையில் கடவுச்சொல்லை பலமுறை தவறாகப் பயன்படுத்தினால் அப்போனில் உள்ள தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]