உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பலர் காயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 18, 2013

அமெரிக்காவில் நியூயோர்க் நகருக்கு அண்மையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் இரு பயணிகள் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 60 பேர் வரையில் காயமடைந்தனர்.


250 பேர் வரையில் இத்தொடருந்துகளில் பயணம் செய்தனர் எனவும், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து நேற்று மாலை உள்ளூர் நேரம் 6 மணியளவில் இடம்பெற்றது. ஐந்து பேர் வரையில் படுகாயமடைந்தனர்.


நியூயோர்க் நகரின் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தொடருந்து கனெடிகட் மாநிலத்தின் நியூ ஏவன் நகரில் தடம் புரண்டதை அடுத்து எதிரே வந்து கொண்டிருந்த வேறொரு தொடருந்து இதனுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தை அடுத்து நியூயோர்க்கிற்கும் பொஸ்டனுக்கும் இடையிலான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.


தொடருந்தின் முன்பகுதி பெருமளவு சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கனெடிகட் ஆளுனர் டனெல் மலோய், ஒரு தொடருந்தின் சில்லுகள் மற்றையதுடன் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறினார். எவ்வாறு இவ்விபத்து இடம்பெற்றது என்பது இதுவரை அறியப்படவில்லை.


மூலம்

[தொகு]