அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 27, 2011

அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஓக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சா மாநிலங்களில் வீசிய பெரும் சூறாவளியால் அங்கு இறந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது.


அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 122 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. சூறாவளி மணிக்கு 243 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது.


ஒக்லகாமா நகரின் கனடியப் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன. அதேபோல, கன்சாசு மற்றும் அர்கன்சா மாநிலங்களையும் சூறாவளி தாக்கியுள்ளது.


இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது.


சூறாவளி பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.


அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் சேதம் அதிகமாகியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]