உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கா ஏவிய மீஒலிவேக வானூர்தி வானில் தொலைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 12, 2011

அமெரிக்க இராணுவ அறிவியலாளர்கள் பரிசோதனை முறையில் ஏவிய ஆளில்லா மீஒலிவேக வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஃபால்க்கன் மீஒலிவேக சோதனைக் கலம்

ஃபால்க்கன் மீஒலிவேக சோதனைக் கலம் (Falcon Hypersonic Test Vehicle 2, HTV-2) வெற்றிகரமாகத் தனது ராக்கெட்டில் இருந்து விடுபட்ட போதிலும், வெளியேறிய சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்புகள் அறுந்து விட்டன. இவ்வானூர்தி ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் செல்லவல்லது.


அமெரிக்க பாதுகாப்புத் துறையினரின் இந்த ஃபால்க்கன் திட்டத்தின் மூலம் இவ்வாறான மீஒலிவேக வானூர்திகள் மூலம் உலகின் எந்த மூலையையும் ஒரு மணி நேரத்தினுள் தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.


நேற்று வியாழக்கிழமை காலையில் கலிபோர்னியாவின் வாண்டர்பர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த அதிவேக விமானம் புறப்பட்ட 9 நிமிடத்தில் அதனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இது பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்போர் விமானம் கடந்த ஆண்டும் சோதனை முயற்சியாக ஏவப்பட்டது. ஆனாலும் இவ்விமானமும் ஏவப்பட்ட சில நிமிடநேரத்தில் தொடர்புகளை இழந்து பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. இரண்டாவது தடவையும் இத்திட்டம் பிழைத்ததை அடுத்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து மீளாய்வு செய்யப்படலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

[தொகு]