உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நைஜீரியப் பயணி கைது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 27, 2009

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்கா சென்ற டெல்ட்டா 253 பயணிகள் விமானத்தை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்படும் நைஜீரிய பயணி ஒருவர் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


டெல்ட்டா வான்பேருந்து

நோர்த்வெஸ்ட் ஏர்லைன்சைச் சேர்ந்த விமானம் வெள்ளியன்று ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கிளம்பி டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் நேரத்தில் 23-வயது அப்துல்முத்தலாக் என்ற இந்த நபர் ஏதோ ஒன்றை வெடிக்க முயற்சி செய்தார் எனவும், சக பயணிகள் இம்முயற்சியைத் தடுத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.


இந்நபர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் இலண்டனில் தங்கியிருந்தவர் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து புலன் விசாரணைகளில் பிரித்தானியக் காவல்துறையினர் உதவிவருகின்றனர்.


நைஜீரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது தங்களது அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது என நைஜீரிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்