உள்ளடக்கத்துக்குச் செல்

அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 25, 2011

அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான அலாஸ்காவின் அலூசியன் தீவுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நூற்றுக்கனக்கான மக்கள் மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.


உள்ளூர் நேரப்படி வியாழன் அன்று இரவு 07:10 மணியளவில் அடுத்ததடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோளில் 7.4, 7.2 புள்ளிகளாகப் பதிவானயின. டச்சுத் துறைமுகத்தில் இருந்து 130 கிமீ வடகிழக்கே 40 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம் கொண்டிருந்தன. துறைமுகப் பகுதியில் சுமார் 4,400 பேர் வசிக்கின்றனர்.


சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் மக்கள் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். துறைமுகப் பகுதிகளில் இருந்து மீன்பிடிப் படகுகள் கரையில் இருந்து கடலுக்குள் வெளியேறிச் சென்றன.


ஆனாலும் ஒரு மணி நேரத்தின் பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சேத விபரங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.


மூலம்[தொகு]