உள்ளடக்கத்துக்குச் செல்

அலாஸ்கா விமான விபத்தில் முன்னாள் மேலவை உறுப்பினர் உட்பட ஐவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 11, 2010

ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற தனியார் விமானம் ஒன்று திங்கட்கிழமை அன்று தென்மேற்கு அலாஸ்காவில் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் முன்னாள் அலாஸ்கா செனட்டர் டெட் ஸ்டீவன்சும் ஒருவர்.


டெட் ஸ்டீவன்ஸ் சோன் ஓ’கீஃப்
இடது: டெட் ஸ்டீவன்ஸ் (முன்னாள் செனட்டர்)
வலது: ஓ’கீஃப் (முன்னாள் நாசா தலைவர்)

விமானத்தில் பயணம் செய்த முன்னாள் நாசா தலைவர் சீன் ஓ’கீஃப் மற்றும் அவரது மகன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓ’கீஃப் நாசாவில் 2001 முதல் 2005 வரை தலைவராக இருந்தவர்.


திங்கட்கிழமை அன்று இவ்விமானம் காணாமல் போயிருந்தது. டிலிங்கம் என்ற நகரில் இருந்து 17 மைல்கள் தூரத்தில் மலைப்பகுதியில் இவ்விமானத்தின் சிதைந்த பாகங்களை உள்ளூர் வாசிகள் கண்டுபிடித்தனர்.


ரிப்பப்ளிக்கன் டெட் ஸ்டீவன்ஸ் மேலவையில் அதிக காலம் உறுப்பினராக இருந்த பெருமைக்கு உரியவர். 1968 ஆம் ஆண்டு முதல் இவர் மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008 நவம்பரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1978 இல் அலாஸ்காவில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் இவர் உயிர் பிழைத்திருந்தார். இவரது மனைவி ஆன் உட்படப் பலர் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர்.


அலாஸ்காவில் கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.

மூலம்[தொகு]