உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(ஆப்பிரிக்க காடுகளில் கடந்த 2013ஆம் ஆண்டுமட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனி, சூன் 14, 2014

ஆப்பிரிக்கக் காடுகளில் தந்தத்திற்காக கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கென்யா, தான்சானியா, மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் அதிகளவாக 80% யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த வேலைகளை வியாபாரத்தில் கள்ளத்தனமாக செயல்படும் மாபியா கும்பல் நடத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் ஆசியப் பகுதிகளிலும் நடக்கிறது ஆனால் துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை என்று சர்வதேச வனவிலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. யானைகள் சீன சர்க்கஸ்களுக்கும், தாய்லாந்து சுற்றுலாத் துறைக்கும் இங்கிருந்து அனுப்பப்படுவதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.


மூலம்

[தொகு]