இந்தியக் காஷ்மீர் குண்டுவெடிப்பில் மதத்தலைவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 10, 2011

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறிநகரில் இசுலாமியப் பள்ளிவாசல் ஒன்றின் வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மௌலானா சௌக்கத் ஷா என்ற மதத்தலைவர் கொல்லப்பட்டார். இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு நடத்தப்படுவதை இவர் கண்டித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1230 மணியளவில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த மௌலவி மருத்துவமனையில் உயிரிழந்தார். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் ஷாவைக் கொல்ல இரண்டு முயற்சிகள் நடைபெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இவரது படுகொலையை அடுத்து ஸ்ரீநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் கொண்டாடப்பட்டது.


கொல்லப்பட்ட ஷா முஸ்லிம்களின் வகாபி பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜமாய்ட்-இ-ஆலி அதித் என்ற மதவாதக் கட்சியின் தலைவர் ஆவார். இக்கட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒரு பிரிவின் தலைவரே இவர்.


பிரிவினைக்கு ஆதரவான அரசியலில் ஷா மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனாலும் மிதவாதப் போக்கையே இவர் கடைப்பிடித்து வந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மி-காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்.


காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இவர் அண்மையில் மாநில ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருந்தமை குறித்து இவர் ஏனைய பிரிவினைவாதக் கட்சிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


மூலம்[தொகு]

{{DEFAULTSORT:இந்திய]]