உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்மு காஷ்மீரில் இராணுவத் தொடரணி மீது போராளிகள் தாக்குதல், ஒருவர் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 11, 2010

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராஜூரி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இராணுவத் தொடரணி ஒன்றின் மீது போராளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் கொல்லப்பட்டு ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரு இராணுவச் சிப்பாய்களும் அடங்குவர்.


இராணுவத் தொடரணி மீது போராளிகள் மலைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில், அவ்விடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தாக்கப்பட்டதாகவும், அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரே கொல்லப்பட்டதாக உயர் காவல்துறை அதிகாரி ஆர். கே. ஜல்ல தெரிவித்தார்.


இராணுவத்தினர் திருப்பிச் சுட ஆரம்பித்ததாகவும், தொடர்ந்து அங்கு சண்டை இடம்பெற்று வருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


ஜம்முவில் இருந்து 190 கிமீ வடக்கே கடல் மட்டத்தில் இருந்து 8,000 அடி உயரத்தில் உள்ல மலைப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர்.

மூலம்[தொகு]