உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை, அமெரிக்கா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 2, 2014

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அமெரிக்க நாட்டின் சிறப்புப் பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ், பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான காஷ்மீர் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. இந்த விவகாரம் பற்றி அமெரிக்க பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ் பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள காஷ்மீர் பற்றிய விவகாரத்தில் எந்த ஒரு மூன்றாம் நபரையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளதால் அமெரிக்கா இந்த விசயத்தில் மத்தியஸ்தம் பன்ன விரும்பவில்லை என்று தெரிவித்தார். அத்தோடு எல்லை தாண்டிய தீவிரவாதம் தமக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்

[தொகு]