இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
சனி, அக்டோபர் 29, 2011
இந்தியாவில் மணிக்கு 15 பேர் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக இந்திய மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன.
தற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டில் (2010) இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மூலம்
[தொகு]- இந்தியா: 2010 இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை, பிபிசி, அக்டோபர் 29, 2011
- Suicides in India number 15 per hour, gov't says, சிபிஎஸ் செய்திகள், அக்டோபர் 28, 2011
- Government report says 15 people commit suicide every hour in India as rate rises, வொசிங்டன் போஸ்ட், அக்டோபர் 28, 2011
- தற்கொலையில் தமிழகம் முதலிடம்- 2010ல் 16,561 பேர் தற்கொலை: இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை!, தட்ஸ் தமிழ், அக்டோபர் 28, 2011