இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 21, 2013

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு தீர்மானத்தின் முன்வரைவினை இக்கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மான முன்வரைவின் மீது விவாதித்து, பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்திட இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


தீர்மானத்தின் முன்வரைவைத் தாக்கல் செய்தபிறகு இரண்டு முறை அதில் திருத்தங்களை அமெரிக்க ஐக்கிய நாடு செய்துள்ளது. ஆக, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்வரைவின் பதிப்பு எண், 3 ஆகும். திருத்தங்களினால் தீர்மானம் நீர்த்துப் போய்விட்டதாக 'அனைத்துலக மன்னிப்பு அவை (Amnesty International)' வருத்தம் தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]