உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் கிழக்கில் 16 தமிழ் பொதுமக்கள் படையினரால் கைது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 29, 2010

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 16 தமிழ் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை செல்லிட தொலைபேசிகளில் வைத்திருந்தமை, காணொளிகளை கொண்டிருந்தமை போன்ற காரணங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதிகளில் இருந்து 16 தமிழ் மக்களை இலங்கைப் படையினர் கடந்த வாரம் கைது செய்துள்ளனர்.


படுவான்கரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள ஏனைய பிரதேசங்களில் இலங்கைப் படையினரின் தேடுதல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்

[தொகு]