இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு ஐநா ஆலோசகர் பதவி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 29, 2012

இலங்கை அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய இராஜதந்திரிகளில் ஒருவரு, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூனினால் ஏற்படுத்தப்பட்ட அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவில் இவர் பணியாற்ற விருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனாலும் இது பற்றிய அறிவிப்புத் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என இலங்கையில் உள்ள ஐநா காரியாலயம் தெரிவித்துள்ளது.


2009ல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட இலங்கையின் இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார். தற்போது இவர் ஐநாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக பணியாற்றுகிறார்.


நான்காம் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு இவரே காரணம் என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


மூலம்[தொகு]