இலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து

வியாழன், திசம்பர் 16, 2010

இலங்கையில் இணையம் சார்ந்த குற்றச் செயற்பாடுகள் அதிகரிப்பதாக இலங்கையின் கணனி தொடர்பான பிரச்சனைகளை அவதானிக்கும் அமைப்பு (Computer Emergency Response Team) அறிவித்துள்ளது.


இந்த அமைப்பைச் சார்ந்த றோகன பல்லியகு கருத்துத் தெரிவிக்கையில் "இணையக் குற்றச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஆறு மாத காலத்தில் 160க்கு மேற்பட்ட குற்றத்தாக்கல்களைப் பெற்றுள்ளோம்" என்று அறிவித்தார்.


அனேகமான குற்றச் செயற்பாடுகள், கடவுச்சொல் திருட்டு, தகவல் திருட்டு, கப்பம் கோரல், கடனட்டை திருட்டு, முகநூல் சார்ந்த குற்றச்சாட்டுகளைப் பெறுவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]