இலங்கையில் பெண் பத்திரிகையாளர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 3, 2014


இலங்கையின் மூத்த வணிக ஊடகவியலாளர் மெல் குணசேகர (வயது 46) கொழும்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடல் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று கத்திக் குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மெல் குணசேகரவின் பெற்றோரும் சகோதரனும் தேவாலயத்திற்கு ஞாயிறு காலை ஆராதனைக்கு சென்றிருந்த வேளையிலேயே இவர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு தொம்பேயைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மெல் குணசேகர பிட்ச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாகப் பணியாற்றினார். ஏ. எப். பி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியிருந்தார்.


மூலம்[தொகு]