இலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களை கொல்லத் திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 8, 2012

இலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களை நாய்க்கடியிலிருந்தும், வெறிநாய்க்கடி நோயிலிருந்தும் காப்பாற்றும் முயற்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தெருநாய்கள்

நாய்களின் பெருக்கத்தையும், தாக்கத்தையும் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் மிருக வைத்தியப் பிரிவு ஆரம்பித்த சகல திட்டங்களும் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்திருந்தார்


நாய்க்கடியினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு ஆண்டுதோறும் 50 கோடி ரூபா செலவிடுகிறது. அவற்றைவிட நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஆண்டுதோறும் 50 கோடி ரூபா செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நாய்களின் பெருக்கத்தை தடுக்க மாற்று திட்டம் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் நாய்கள் மனிதர்களைக் கடிப்பது என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்றும் நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


நாய்களைக் கொல்லும் அரசின் திட்டத்தை மிருக உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.


மூலம்[தொகு]