இலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 7, 2011

இலங்கையில் 14 ஆவது மக்கள்தொகை மதிப்பீடு 30 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டு நடைபெறவுள்ளதாகவும், இதற்கு 700 மில்லியன் இலங்கை ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறினார். இதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மக்கள்தொகை மதிப்பீடு புதிய முறையில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதற்காக வெளியார் நிறுவனமொன்றின் சேவையைப் பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் கூறினார்.


சூலை 2011 இல் நாடெங்கும் மக்கள்தொகை மதிப்பீடு நடத்தப்படும் என இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இறுதியாக 1981ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர 18 மாவட்டங்களில் மக்கள்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டது. இம்முறை முழுநாட்டிலும் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.


மூலம்[தொகு]