இலங்கை இரட்டைக் குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
திங்கள், சனவரி 7, 2013
இலங்கையில் கடந்த காலங்களில் தற்காலிகமாக கைவிடப்பட்ட இரட்டை குடியுரிமைச் சட்டங்களை மீண்டும் அமுல்படுத்த குடிவரவு கட்டுப்பாட்டுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் இரட்டை குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் சூலாநந்தா பெரேரா தெரிவித்திருந்தார். கடந்த பல மாதங்களாக இந்த சட்டம், சட்டவரைஞர் திணைக்களத்தில் பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முறைமைகளை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமுலாக்கும் பொருட்டு, தற்காலிகமாக இது கைவிடப்பட்டிருந்ததாக வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரிக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரட்டை குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்வரும் சனவரி மாதம் 18ம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்
[தொகு]- கைவிடப்பட்ட இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருகிறது!, தமிழ்வின், சனவரி 6, 2013
- இரட்டை குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கை, ரிபிசி லண்டன், டிசம்பர் 17, 2012