இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், பெப்ரவரி 10, 2014

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே 48 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் செய்யப்பட்டனர். இவர்களின் 5 விசைப்படகுகளும் ஐயாயிரம் கிலோ மீன்களும் இந்தியக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட 25 பேரையும் கடலோர காவல் படையினர், காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நாகை கீழையூர் கடலோர காவல் படையினரிடம், கடலோர காவற்படை கமாண்டர் உதல்சிங் ஒப்படைத்தார். கைதான 25 பேரும் இன்று மதியம் நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg