ஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி
திங்கள், திசம்பர் 21, 2009
- 17 பெப்ரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: ஈரான் அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி
சனியன்று மரணமான ஈரான் அரசாங்கத்தின் விமர்சகரும் மூத்த மதபோதகருமான அயத்தொல்லா உசைன் அலி மொண்டாசாரியின் (அகவை 87) மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
தலைநகர் தெகரான் மற்றும் அயத்தொல்லா பிறந்த இடமான நசாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன.
87 வயதான அயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தலைவர்களில் ஒருவர், ஆனால் பின்னர் அதிபர் அஹமெதிநிஜாத் அவர்களை வெளிப்படையாக இவர் குறை கூறினார்.
மூலம்
[தொகு]- "Iran reformers flock to funeral of dissident cleric Grand Ayatollah Hossein Ali Montazeri". த டைம்ஸ், டிசம்பர் 20, 2009
- "Grand Ayatollah Montazeri death sparks protests". டெய்லி டெலிகிராப், டிசம்பர் 20, 2009
- "Crowds gather to mourn reformist Iran cleric Montazeri". பிபிசி, டிசம்பர் 20, 2009
- "Iran cleric Montazeri dies". அல்ஜசீரா, டிசம்பர் 20, 2009