உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 21, 2009


சனியன்று மரணமான ஈரான் அரசாங்கத்தின் விமர்சகரும் மூத்த மதபோதகருமான அயத்தொல்லா உசைன் அலி மொண்டாசாரியின் (அகவை 87) மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர்.


திங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.


எதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


தலைநகர் தெகரான் மற்றும் அயத்தொல்லா பிறந்த இடமான நசாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன.


87 வயதான அயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தலைவர்களில் ஒருவர், ஆனால் பின்னர் அதிபர் அஹமெதிநிஜாத் அவர்களை வெளிப்படையாக இவர் குறை கூறினார்.

மூலம்

[தொகு]