உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ரேனில் தொடருந்தும் பேருந்தும் மோதியதில் 37 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 12, 2010

கிழக்கு உக்ரைனில் தொடருந்து ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.


உக்ரைனின் தினிப்புரோபெத்ரோவ்ஸ்க் பகுதி

உக்ரைனின் தினிப்புரோபெத்ரோவ்ஸ்க் பகுதியில் அர்ஜனீகித்செ என நகரில் இன்று காலை உள்ளூர் நேரம் 0900 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.


பயணிகளை ஏற்றி வந்த பேருந்து தொடருந்துக் கடவை ஒன்றைக் கடக்க முயல்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கடவையை நோக்கி வந்த புகைவண்டி எழுப்பிய ஒலியை பேருந்தின் சாரதி சட்டை செய்யாமல் கடக்க முற்பட்டார் என ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


மீட்புப் பணியாளர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


மூலம்