உக்ரைனியப் பெண்ணியவாதிகள் இந்தியத் தூதரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 19, 2012

உக்ரைன், உருசியா, கசக்ஸ்தான், மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 15 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு இந்திய நுழையுரிமை வழங்குவதில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு எடுத்துள்ள முடிவை ஆட்சேபத்து உக்ரைனின் பெண்ணியவாதிகள் சிலர் இந்தியத் தூதரின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


"நாம் பாலியல் தொழிலாளிகள் அல்ல. பாலியல் சேவைகளை வழங்கி பணம் ஈட்டவே நாம் அங்கு செல்கிறோம்," என அவர்கள் கூறினர். இந்தியா தனது சொந்த பாலியல் தொழில் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும், அதை விடுத்து ஏனைய நாடுகளைக் குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நடவடிக்கைக்கு இந்தியா உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெண்ணியவாதிகளில் ஒருவரான அலெக்சாண்ட்ரா செவ்ச்சென்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.


கடும் குளிரில் பல பெண்கள் இந்தியத் தூதரின் இல்லத்தின் மேல்மாடத்தில் அரை நிர்வாணமாக பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


மூலம்[தொகு]