உக்ரைனில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது மூன்று பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 22, 2014

உக்ரைன் தலைநகர் கீவில் அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.


]தினாமீவ்ஸ்கயா வீதியில் ஆர்ப்பாட்டம், சனவரி 20, 2014

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை செய்யும் சட்டமூலம் இன்று புதன்கிழமை நடைமுறைக்கு வருவதையிட்டு கடந்த இரண்டு நாட்களாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்ட இயக்கம் யூரோமைதான் என அழைக்கப்படுகிறது.


10,000 இற்கும் அதிகமான கலகமடக்கும் படையினரை தலைநகருக்கு அனுப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக உக்ரைனிய ஊடகங்கள் கூறுகின்றன.


கடந்த ஆண்டு நவம்பரில் அரசுத்தலைவர் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர எடுத்த முடிவை எதிர்க்கும் முகமாக யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.


மூலம்[தொகு]