உத்தரப்பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் பல குழந்தைகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 13, 2017

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நாட்களில் 60 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த புஸ்பா சேல்ஸ் தனியார் நிறுவனத்துக்கு பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது.இதனால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலம்[தொகு]

பிபிசி, ஆகத்து 12, 2017

தி இந்து