உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 12, 2024

உருசிய தலைநகர் மாசுக்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் வானூர்தி, சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர். இதில் 65 பேர் பயணிகள், 6 பேர் வானூர்தி பணியாளர்கள்.


சரடோவ் ஏர்லைன்சின் ஏஎன்148 என்ற இந்த வானூர்தி, கசகசுத்தான் உடனான உருசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்சுக் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. வானூர்தி ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.


மாசுக்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், வானூர்தி எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர்.


இந்த வானூர்தி ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக வானூர்தி கண்காணிப்பு தளமான, 'ப்ளைட்ரேடார்' கீச்சு செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், வானூர்தி்யின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன.


வானூர்தில் 65 பயணிகள் மற்றும் ஆறு வானூர்தி குழுவினர் இருந்துள்ளனர். உருசிய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.


தற்போது விபத்தில் சிக்கியுள்ள வானூர்தி சரடோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமானது.


வானூர்தில் வானூர்தி ஓட்டுநர்கள் இருக்கும் பகுதியில், வானூர்தி ஓட்டுநர் அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்சின் சர்வதேச வானூர்தி சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.


இது உருசிய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் இச்சோர்சியாவிற்கு சேவை வழங்கி வருகிறது.

மூலம்

[தொகு]