உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் மிக நீளமான அதி-வேகத் தொடருந்து சேவை சீனாவில் ஆரம்பம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 26, 2012

சீனத் தலைநகர் பெய்ஜிங்கையும் குவாங்க்சூ நகரையும் இணைக்கும் உலகின் மிக நீளமான அதி வேகத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.


முதலாவது தொடருந்து இன்று காலையில் பெய்ஜிங் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இத்தொடருந்துகள் 300கிமீ/மணி வேகத்தில் செல்லும். இதன் மூலம் பயண நேரம் அரைவாசிக்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2,298 கிமீ தூரப் பாதையில் முக்கிய நகரங்களான வுகான், ஷாங்சா போன்றவை உட்பட மொத்தம் 35 தரிப்புகள் உள்ளன. பொதுவாக 22 மணி நேரப் பயணம் தற்போது 10 மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவடைகிறது.


முன்னாள் கம்யூனிசத் தலைவர் மா சேதுங்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தத் தொடருந்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]