உள்ளூராட்சித் தேர்தல் 2011: வட கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, சூலை 24, 2011

இலங்கையில் நேற்று சனிக்கிழமை அன்று மீதமுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தல்களில் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18 சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தனியான சின்னம் ஒதுக்கப்படாததால் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது.

யாழ்ப்பாண மாவட்டம்

16 சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றில் 3 இடங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்றது. ஏனைய 13 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது.

 • வல்வெட்டித்துறை நகரசபை
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2,416 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 633 வாக்குகள், 2 இடங்கள்
 • பருத்தித்துறை நகரசபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 3263 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1107 வாக்குகள், 2 இடங்கள்
 • பருத்தித்துறை பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 8938 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3022 வாக்குகள், 2 இடங்கள்
 • சாவகச்சேரி நகரசபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 4,307 வாக்குகள், 9 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1232 வாக்குகள், 2 இடங்கள்
 • சாவகச்சேரி பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 12,565 வாக்குகள், 12 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3161 வாக்குகள், 2 இடங்கள்
  • ஐக்கிய தேசிய கட்சி, 667 வாக்குகள், 1 இடம்
 • நல்லூர் பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 10,207 வாக்குகள், 10 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,238 வாக்குகள், 2 இடங்கள்
 • காரைநகர் பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 1787 வாக்குகள், 3 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1667 வாக்குகள், 1 இடம்
  • ஐக்கிய தேசிய கட்சி, 928 வாக்குகள், 1 இடம்
 • ஊர்காவற்துறை பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,834 வாக்குகள், 4 இடங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 805 வாக்குகள், 1 இடம்
 • நெடுந்தீவு பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,609 வாக்குகள், 8 இடங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 216 வாக்குகள், 1 இடம்
 • வேலணை பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3973 வாக்குக, 8 இடங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 2221 வாக்குக:, 3 இடங்கள்
 • வலிகாமம் மேற்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 12117 வாக்குகள், 11 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3041 வாக்குகள், 3 இடங்கள்
 • வலிகாமம் வடக்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 12,065 வாக்குகள், 15 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4919 வாக்குகள், 6 இடங்கள்
 • வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 11,954 வாக்குகள், 12 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4428 வாக்குகள், 4 இடங்கள்
 • வலிகாமம் தெற்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 12895 வாக்குகள், 13 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4027 வாக்குகள், 3 இடங்கள்
 • வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 16,763 வாக்குகள், 16 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 6635 வாக்குகள், 5 இடங்கள்
 • வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 12454 வாக்குகள், 15 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 2522 வாக்குகள், 3 இடங்கள்
கிளிநொச்சி மாவட்டம்

பச்சிளைப்பள்ளி, கரைச்சி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கு தேர்தல்கள் இடம்பெற்றது இந்த மூன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

 • பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
  • தமிழர் விடுதலைக் கூட்டணி, 1650 வாக்குகள், 6 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1184 வாக்குகள், 3 இடங்கள்
 • கரைச்சி பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 18609 வாக்குகள், 15 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 6097 வாக்குகள், 4 இடங்கள்
 • பூநகரி பிரதேச சபை
  • தமிழர் விடுதலைக் கூட்டணி, 3827 வாக்குகள், 6 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3689 வாக்குகள், 4 இடங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைக்கு மட்டும் தேர்தல் இடம்பெற்றது. இதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

 • துணுக்காய் பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 2198 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 847 வாக்குகள், 2 இடங்கள்
அம்பாறை மாவட்டம்

காரைதீவு, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளுக்குத் தேர்தல்கள் இடம்பெற்றன. இவை இரண்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

 • காரைதீவு பிரதேச சபை
  • இலங்கை தமிழரசுக் கட்சி, 4284 வாக்குகள், 4 இடங்கள்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 2364 வாக்குகள், 1 இடம்
 • திருக்கோவில் பிரதேச சபை
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி 6,865 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1,249 வாக்குகள், 1 இடம்
திருகோணமலை மாவட்டம்

சேருவில, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றில் திருகோணமலை பட்டின சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய மூன்றையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் கைப்பற்றின.

 • குச்சவெளி பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 8,451 வாக்குகள், 6 இடங்கள்
  • இலங்கை தமிழரசு கட்சி 2,961 வாக்குகள், 2 இடங்கள்
 • திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை
  • இலங்கை தமிழரசு கட்சி 8,986 வாக்குகள், 5 இடங்கள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 6,353 வாக்குகள், 3 இடங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி, 2869 வாக்குகள், 1 இடம்
 • சேருவில பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 4,471 வாக்குகள், 7 இடங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி, 728 வாக்குகள், 1 இடம்
  • இலங்கை தமிழரசு கட்சி 649 வாக்குகள், 1 இடம்
 • கந்தளாய் பிரதேச சபை
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 14,270 வாக்குகள், 8 இடங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி, 5,820 வாக்குகள், 5 இடம்

இவ்வாண்டு மார்ச் 17 ஆம் நாளன்று இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான முதற் தொகுதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 14 சபைகளில் 12 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg