ஊடகவியலாளர் திசைநாயகத்திற்கு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 22, 2009


இலங்கையில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜெ.சி.திசைநாயகத்திற்கு சீ.பீ.ஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருதினை அறிவித்து கௌரவித்துள்ளது.


உள்நாட்டில் தமது கடமை காரணமாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு விருது வழங்கி கௌரவிக்கும் ஊடகவியலாளர்களில் இம்முறை ஜே.எஸ்.திசைநாயகம் விருதுக்குரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இலங்கையில் மாதாந்த சஞ்சிகையொன்றில் செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த ஊடகவியலாளர் திசைநாயகம் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]

  • பிபிசி தமிழோசை