ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், மே 3, 2010

பயங்கரவாதத்துக்குத் துணை போனதாகக் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இலங்கை ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் இன்று அறிவித்தார்.


ஈழத்தமிழர்களின் பிரிவினைப் போராட்டம் பற்றி ஜெயப்பிரகாச்ஜ் திசைநாயகம் தனது பத்திரிகையில் எழுதி வந்தார்.


உலக ஊடகவியலாளர் சுதந்திர நாளை ஒட்டி இந்த மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார்.


திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தன.


சென்ற ஜனவரி மாதம் திசைநாயகம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூலம்[தொகு]