எகிப்திய அரசுத்தலைவர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகினார்
- 22 செப்டெம்பர் 2016: எகிப்து கடற்கரையில் புலம் பெயர்வோர் படகு கவிழ்ந்ததில் 100இக்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
- 29 மார்ச்சு 2016: எகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது
- 31 அக்டோபர் 2015: உருசிய விமானம் 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது
- 21 மே 2014: எகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
- 19 சனவரி 2014: புதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்
சனி, பெப்பிரவரி 12, 2011
கடந்த 18 நாட்கள் இடம்பெற்று வந்த மக்கள் போராட்டங்களை அடுத்து எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தனது பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
"நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இராணுவ உயர் மன்றம் நாட்டின் தலைமையைக் கவனிக்கும்," என எகிப்தியப் பிரதித் தலைவர் ஒமார் சுலைமான் தெரிவித்தார். நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை ஆகியன கலைக்கப்படும் என அல்-அராபியா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
முபாரக்கின் பதவி விலகலைக் குறித்து நோபல் விருதாளர் முகமது எல்பரதேய் குறிப்பிடுகையில், "இது எனது வாழ்நாளில் மிகப்பெரும் நாள். நாடு இப்போது விடுதலையாகி விட்டது," எனத் தெரிவித்துள்ளார். "எகிப்து இப்போது மக்களாட்சிக்கு செல்ல முயல வேண்டும்," என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய முபாரக் தலைநகர் கெய்ரோவை விட்டுப் புறப்பட்டு விட்டதாகவும், தற்போது செங்கடல் பகுதியில் உள்ள அவரது சுற்றுலா மையத்தில் தங்கியுள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்து வந்தார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- எகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது, திங்கள், சனவரி 31, 2011
- எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக், சனி, சனவரி 29, 2011
மூலம்
[தொகு]- "Egypt's Mubarak resigns as leader". பிபிசி, பெப்ரவரி 11, 2011
- "Mubarak Steps Down as President, Army Takes Over". ஏபிசி, பெப்ரவரி 11, 2011
- "Mubarak resigns, hands power to the military". யூஎஸ்ஏ இன்று, பெப்ரவரி 11, 2011
- அசோசியேட்டட் பிரசு "Egyptian President Mubarak steps down". பெப்ரவரி 11, 2011