உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 9, 2016

சனிக்கிழமை நடைபெறும் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு 900 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. பவர்பால் குலுக்கலில்(லாட்டரி) 44 மாநிலங்களும் வாசிங்டன் டிசி , போர்டரிகோ, அமெரிக்க வெர்சின் தீவ ஆகிய மூன்று ஆட்சிப்பகுதிகளும் கலந்துகொள்கின்றன.


குலுக்கல் முடியும் நேரத்துக்குள் நிறைபரிசு ஒரு மில்லியன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க குலுக்கலில் இன்று நடைபெறுவதே அதிக தொகையுடைய குலுக்கலாகும். ஒரு குலுக்கல் சீட்டின் விலை இரண்டு அமெரிக்க டாலராகும். பரிசுத் தொகை அதிகமிருப்பதால் பவர்பாலை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.


இதற்கு முன்பு மார்ச் 2012இல் 656 மில்லியன் அமெரிக்க டாலருக்கு குலுக்கலில் நிறைபரிசு விழுந்ததே அதிகபட்சமாகும். கலிபோர்னியா மாநிலத்தில் வழக்கமாக மில்லியன் குலுக்கல் சீட்டுகளே விற்கும், சனிக்கிழமை காலை மணிக்கு 2.8 மில்லியனாக இருந்தது என கலிப்போர்னியா குலுக்கல் பேச்சாளர் கூறினார்.


சென்ற நவம்பர் மாதமே இறுதியாக பவர்பாலில் நிறைபரிசு விழுந்தது. இம்முறையும் யாருக்கும் நிறைபரிசு விழவில்லை என்றால் வரும் புதன்கழமை நடைபெறும் போது நிறைபரிசு 1.3 பில்லியனாக இருக்கும். சனிக்கிழமை இரவு 10.59 (கிழக்கு அமெரிக்க நேரம்) க்கு குலுக்கல் நடைபெறும்.


பரிசை 29 ஆண்டுகளுக்கு பெறமறுத்து மொத்தமாக வாங்கினால் வரி பிடித்தம் போக 558 மில்லியன் டாலர் கிடைக்கும்.


மூலம்[தொகு]