ஐவரி கோஸ்ட் முன்னாள் தலைவர் பாக்போ பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 30, 2011

ஐவரி கோஸ்டின் முன்னாள் அரசுத் தலைவர் லோரண்ட் பாக்போ த ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார். இவர் அங்கு கொலைகள், பாலியல் வன்முறைகள், மத ஒறுப்பு மற்றும் பல மனித உரிமை மீழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுவார்.


முன்னாள் தலைவர் லோரண்ட் பாக்போ

இக்குற்றங்கள் அனைத்தும் 2010 டிசம்பர் 16 முதல் 2011 ஏப்ரல் 12 வரை இடம்பெற்றவையாகும். கடந்த ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளை குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.


ஐவரி கோஸ்ட் சட்டமன்றத்துக்கு இடம்பெற விருக்கும் தேர்தல்களுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பாக்போ நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரலில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அரசுத் தலைவர் ஒருவர் அங்கு விசாரிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.


மூலம்[தொகு]